ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மும்பை சிட்டி எப்.சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Update: 2024-03-12 02:31 GMT

கோப்புப்படம்

மும்பை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் மகாராஷ்டிராவில் உள்ள மும்பை கால்பந்து அரங்கத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் மும்பை அணி 18 ஆட்டங்களில் ஆடி 10 வெற்றி, 6 டிரா, 2 தோல்வி கண்டு 36 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 18 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 டிரா, 6 தோல்வி கண்டு 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்