பிரீமியர் லீக் கால்பந்து : அர்செனல் அணி வெற்றி

நேற்று நடைபெற்ற போட்டியில் அர்செனல் - புல்ஹாம் அணிகள் மோதின

Update: 2022-08-28 09:15 GMT

Image Courtesy : Arsenal Twitter 

2022- 23 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்செனல் - புல்ஹாம் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் புல்ஹாம் அணியின் அலெக்ஸ்சாண்டர் 56வது நிமிடத்தில் கோல் அடித்தார்.இதற்கு பதிலடி கொடுக்க 64வது நிமிடத்தில் அர்செனல் அணியின் மார்ட்டின் கோல் அடித்தார்.

இதனால் ஆட்டம் சமநிலையில் இருந்தது.பின்னர் தீவிரமாக விளையாடிய அர்செனல் அணியின் வீரர்கள், 86வது நிமிடத்தில் அந்த அணியின் கேப்ரியல் கோல் அடித்தார்.இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்