64 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றது வேல்ஸ் அணி

உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் உக்ரைன் அணி, வேல்ஸ் அணியுடன் மோதியது;

Update:2022-06-06 00:59 IST

Image Courtesy : Wales Twitter 

32 அணிகள் இடையிலான 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கு 29 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இதில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி தகுதிச்சுற்று போட்டியில் உக்ரைன் அணி, வேல்ஸ் அணியுடன் மோதியது.இதில் வெற்றி பெறும் அணி உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்ற நிலை இருந்தது .

இந்த போட்டியில் தொடக்கம் முதலே  ஆதிக்கம் செலுத்திய வேல்ஸ் அணி இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .இதனால் 64 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது வேல்ஸ் அணி

Tags:    

மேலும் செய்திகள்