ஜூனியர் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் : 5 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இந்தியா

புள்ளி பட்டியலில் 5 பதக்கங்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது .அமெரிக்கா 6 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது .

Update: 2021-10-01 10:41 GMT
லிமா,பெரு.

2021 ஆம் ஆண்டிற்கான  ஜூனியர் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்று வருகிறது. தொடக்க நாளில் நடந்த பல்வேறு போட்டிகளில் 12 இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

இதை தொடர்ந்து நடந்த  10 மீட்டர் ஏர் பிஸ்டல்  இறுதி போட்டியில் மனு பாகர் தங்கம் பதக்கமும் 16 வயதான ஈஷா சிங்  வெள்ளி பதக்கமும் வென்றனர். பெண்களுக்கான 10மீ  ஏர் ரைபிளில்  ரமிதா வெண்கலம்  வென்றார் .

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.அதன் பிறகு நடைபெற்ற பெண்களுக்கான மகளிர் ஸ்கீட்டில் கானேமத் செக்கோன் வெள்ளி வென்று  இந்தியாவிற்கு 5வது பதக்கத்தை பெற்று தந்தார்.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் 5 பதக்கங்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தில்  நீடிக்கிறது . அமெரிக்கா 6 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது .

மேலும் செய்திகள்