இன்றைய ராசிபலன்: 16.09.2025...நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2025-09-16 06:22 IST

இன்றைய பஞ்சாங்கம்:-

செப்டம்பர் 16

கிழமை: செவ்வாய்க்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: ஆவணி

நாள்: 31

ஆங்கில தேதி: 16

மாதம்: செப்டம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று காலை 10-45 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்

திதி: இன்று அதிகாலை 03-57 வரை நவமி பின்பு தசமி

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 7.45 - 8.45

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 03.00 - 4.30

எமகண்டம் மாலை: 9.00 - 10.30

குளிகை காலை: 12.00 - 1.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

சொந்த தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும். புது முதலீடுகளில் கவனம் தேவை. வர வேண்டிய பணம் கைக்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். ஒரு முறைக்கு இரு முறைப் படிப்பது நல்லது. தம்பதிகளுக்கு ஒற்றுமை குறையாது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

வீட்டில் பண பற்றாக்குறை இருக்காது. நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உறவினர்களை பார்த்து மகிழ்வீரகள். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். குடும்ப தலைவிகளுக்கு தங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மிதுனம்

நீண்ட காலமாக பார்க்காத நண்பரை இன்று சந்திப்பீர்கள். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. பிரபலங்கள் நண்பராவர். அவர்களால் பெரிய உதவிகள் கிடைக்கும். வழக்கறிஞர்களுக்கு தங்கள் வழக்கு வெற்றியாகும். பிள்ளைகள் தங்களின் பெற்றோரை மதிப்பார்கள். மளிகை கடை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கடகம்

வெளிநாடு பயணம் உண்டாகும். பயணத்தால் லாபம் தரும். பெண்களுக்கு புதிய ஆடை ஆபரணம் கிடைக்கும். உடலில் முதுகு மற்றும் இடுப்பில் வலி வந்து போகும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு வந்து போகும். அக்கம் பக்கம் வீட்டார் உதவி புரிவார்கள். அலுவலகத்தில் நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

சிம்மம்

அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை சரிவர செய்து முடிப்பார்கள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவர். மறுமணத்திற்காக காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். ரியல் எஸ்டேட் கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

கன்னி

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஆலோசனை செய்து தங்கள் வேலைகளை பங்கிட்டு முடிப்பர். மூத்த சகோதரர் மூலம் தங்களுக்கு நன்மை விளையும். வியாபாரிகள் தஙகள் தொழிலின் போது கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

சொந்த தொழில் செய்பவர்களுக்கு அதிக உழைப்பால் சிறந்த பலன் உண்டு. இறுதியில் நிதி நிலை மேம்படும். மாணவ, மாணவிகளுக்கு நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். உத்யோகஸ்தர்களுக்கு புதிய திட்டங்களில் பங்கு பெறுவீர்கள். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம்

அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

தனுசு

பெண்கள் சக ஊழியர்களுடன் கவனமாக நடப்பது நல்லது. கடின உழைப்பால் முன்னேற்றம் உறுதி. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் இடமாற்றத்திற்கு முயற்சி செய்வர். வயதானவர்கள் வெளியே உண்பதை தவிர்த்து வீட்டு உணவை உட்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மகரம்

குடும்பத் தலைவிகளுக்கு வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் நல்ல விற்பனைக்கு உள்ளாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும். இடுப்புகளில் வலி வந்து போகும். தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். சகோதர வழி உறவு மேம்படும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர். பணவரவு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். குடும்பத் தலைவிகள் வெளியில் செல்வதை தவிர்ப்பீர்கள். தங்கள் வேலைகளை தொலைபேசி வாயிலாகவே முடித்துக் கொள்வீர்கள். தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக ஒரு தொகையை டெபாசிட் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

இன்று குடும்ப பெண்களுக்கு உடலில் அசதி தோன்றும். மருத்துவரை நாடுவது நல்லது. இளைஞர்கள் குறித்த நேரத்தில் செல்வதற்காக வாகன வேகத்தை அதிகரிப்பர். ஆனால், சீக்கிரம் கிளம்பினால் நிதானமாக செல்லலாம். பிரிந்திருந்த மாமியார் மருமகள் மீண்டும் சேர்ந்து நல்உறவுடன் இணைவர்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

 

Tags:    

மேலும் செய்திகள்