இன்றைய ராசிபலன்: 17.09.2025...பெண்களுக்கு விரும்பிய வரன் கிடைக்கும்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;
இன்றைய பஞ்சாங்கம்:-
செப்டம்பர் 17
கிழமை: புதன்கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: புரட்டாசி
நாள்: 1
ஆங்கில தேதி: 17
மாதம்: செப்டம்பர்
வருடம்: 2025
நட்சத்திரம்: இன்று காலை 09-56 வரை புனர்பூசம் பின்பு பூசம்
திதி: இன்று அதிகாலை 03-26 வரை தசமி பின்பு ஏகாதசி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 9.15 - 10.15
நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30
ராகு காலம் மாலை: 12.00 - 1.30
எமகண்டம் காலை: 7.30 - 9.00
குளிகை காலை: 10.30 - 12.00
கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45
கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: மூலம்
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். இளைஞர்களுக்கு தேவையற்ற சிந்தனை வந்தால் அதனை தவிர்ப்பது நல்லது. மற்ற ஆக்கபூர்வமான வேலைகளில் ஆர்வத்தை செலுத்தவும். அலுவலகத்தில் அமைதி நிலவும். வியாபாரிகள் தங்களின் அதிக விற்பனைக்காக புதிய வியாபார திட்டங்கள் தீட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
நண்பர்களுடன் நல்உறவு மேம்படும். அவசரத்திற்கு உதவுவார்கள். மாணவர்களுக்கு புத்தக வாசிப்பில் ஆர்வம் கூடும். உறவினர்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு தாங்கள் விரும்பியவாறு வரன் கிடைக்கும். பங்குச் சந்தைகளில் பணம் போட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மிதுனம்
மாணவர்களுக்கு புது விஷயங்களை கற்க வாய்ப்புகள் அதிகரிக்கும். அதனை நன்கு பயன்படுத்திக் கொள்வர். அரசு அதிகாரிகளுக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு வெளிநாட்டு பயணம் லாபத்தை தரும். தம்பதிகளிடையே அன்பு பாராட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கடகம்
சொந்த தொழில் செய்பவர்களுக்கு தாமதமான பணம் வசூலாகும். தொழிலில் நிலைத்தன்மை உண்டாகும் மாணவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெறுவர். காதலர்கள் குடும்பத்தை மட்டும் கவனம் கொள்வது அவசியம். தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து போகும். இருப்பினும் பிரிவினைக்கு இடமில்லை. விட்டுக்கொடுப்பது அவசியம். இந்நாள் முக்கியமான காரியங்களை முடிக்கும் நாளாக அமையும். புரிந்து கொள்ளாமல் பிரிந்த நண்பர்கள் இனி கை கோர்ப்பர். இதுவரை வாரா கடன்கள் வந்து சேரும். உடல் நலம் சிறப்பாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கன்னி
சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் சுமாரான முன்னேற்றம் உண்டாகும். பணப்புழக்கம் சீராகும். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். வழக்கு சாதகமாக முடியும். அரசு டென்டர்களில் தங்களுக்கு சாதகமாக முடியும். அறுவை சிகிட்சையின்றி மருந்து மாத்திரைகளிலேயே உடல் நலம் தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
துலாம்
மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும். சகோதர சகோதரிகளே இடையே அன்பு பாராட்டுவீர்கள். உறவினர்கள் வந்து போவார்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு முன்பணம் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தேக ஆரோக்கியம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
விருச்சிகம்
குடும்பத் தலைவிகளுக்கு வீட்டில் விசேஷ நிகழ்ச்சிகள் நிகழும். உறவினர்களுடன் நல்லிணக்கம் அதிகரிக்கும். கடன் சுமைகள் குறையும். மனநிறைவு தரும் நாளாக அமையும். வியாபாரிகளின் தேவை பூர்த்தியடையும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். தேகம் பளிச்சடையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
தனுசு
மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது..
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
மகரம்
தாங்கள் நினைத்த ஒரு காரியம் என்று இனிதாக முடியும். எதிர்பார்த்த நபரை இன்று சந்திப்பீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவர். தங்கள் பிள்ளைகளின் வரனுக்காக அலைச்சல்கள் மிகும். கூட்டுத் தொழிலாளிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபத்தை தரும். உடல் நலத்தில் கவனம் அவசியம்
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
கும்பம்
சொந்த தொழில் செய்பவர்களுக்கு விளம்பரம் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்வர். புரிந்து கொள்ளாமல் சென்ற தங்கள் துணைவியார் திரும்பி வந்து சேருவார். தாயின் உடல்நலத்தில் கவனம் கொள்ளவும். மருத்துவ செலவிற்கு இடம் உண்டு. ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு பெரிய ஆடர்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
மீனம்
வாகன ஆர்வலர்கள் வாகனம் ஓட்டும் போது விவேகம் அவசியம். வேகத்தை குறைப்பது நல்லது. வியாபாரத்தில் தொய்வு ஏற்படாது. லாபம் அதிகரிக்கும். பண பற்றாக்குறை நீங்கும். குடும்பத் தலைவிகள் குடும்பத்திற்காக புதிய தொழில் துவங்குவர். உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்