ராசிபலன்: 18.09.2025: இன்று பண வரவு அதிகரிக்கும் ராசிகள் எது தெரியுமா..?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;
இன்றைய பஞ்சாங்கம்:-
கிழமை: வியாழக்கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: புரட்டாசி
நாள்: 2
ஆங்கில தேதி: 18
மாதம்: செப்டம்பர்
வருடம்: 2025
நட்சத்திரம்: இன்று காலை 09-28 வரை பூசம் பின்பு ஆயில்யம்
திதி: இன்று அதிகாலை 02-09 வரை ஏகாதசி பின்பு துவாதசி
யோகம்: அமிர்த, சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 10-45 to 11-45
ராகு காலம்: பிற்பகல் 1-30 to 3-00
எமகண்டம்: காலை 6-00 to 7-30
குளிகை: காலை 9-00 to 10-30
கௌரி நல்ல நேரம்: காலை 12-15 to 1-15
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: தெற்கு
சந்திராஷ்டமம்: பூராடம்
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
திருமணமானவர்களுக்கு குழந்தைப் பேறுக்கான நற்செய்தி கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வர். உத்யோகஸ்தர்கள் மற்றவர்களின் விடுமுறையால் தாங்கள் அந்த சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பெரியர்களின் ஆசி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ரிஷபம்
ஆன்மிக சிந்தனை வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பர். வேலை தொடர்பான முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நலம் சீராகும். நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. குழந்தைகள் மகிழ்ச்சி தருவார்கள். பயணத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மிதுனம்
குடும்பத் தலைவிகள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வர வேண்டிய சூழல் உண்டாகும். அதனால் தங்கள் தேவைகள் பூர்த்தியடையும். நீண்ட தூர பயணத்தின் போது தாங்களே வாகனத்தை இயக்குவதாக இருந்தால் இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்ச்
கடகம்
உத்யோகஸ்தர்கள் தங்கள் மேலஅதிகாரிகள் உங்களிடம் பெரிய பொறுப்புகளை தருவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவி தேவைப்படும். வகுப்பறையில் தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தீர்த்துக்கொள்வது நல்லது. உடல் நலம் சிறப்படையும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். சுப காரியங்கள் தாமதமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
சிம்மம்
இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாள். பண வரவு அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவார்கள். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். பிள்ளைகள் தங்கள் பேச்சை கேட்டு நடப்பர். வேலை தொடர்பான முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். உடல்நலம் சீராகும். பயணத்தில் நன்மை உண்டு.
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை
கன்னி
குடும்பத்தில் சிறிய வாக்குவாதம் வந்து போகும். பண வரவு இருக்கும். வேலை தொடர்பான நன்மை உண்டு. உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களிடமிருந்து நன்மை கிடைக்கும். மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி தொடர்பான செய்திகள் வரும்.வியாபாரிகளுக்கு தங்கள் உழைப்பிற்கு நல்ல பலன் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
துலாம்
வழக்குறைஞர்களுக்கு பழைய வழக்குகளில் உள்ள சிக்கல்கள் தீரும். ஆன்மீகத்தில் நம்பிக்கை கூடும். மனதில் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டு. குழந்தைகள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத் தலைவிகள் தங்கள் குலதெய்வத்திற்கு நேர்ந்த பிரார்த்தனைகளை முடித்துவிடுவர்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
விருச்சிகம்
எதிர்பாராத திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். இதன் மூலம் தாங்கள் நல்ல லாபத்தினை பெறுவர். பண வரவு அதிகரிக்கும். வேலை தொடர்பான நல்ல செய்தி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள் தங்களுக்கு ஆதரவு தருவார்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. உடல்நலம் சீராகும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
தனுசு
பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர். பெண்களுக்கு பண வரவு அதிகரிக்கும். குறிப்பாக கணினி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக ஆர்டர்களை பெறுவர். கனவுத் தொல்லை நீங்கும். நீரிழிவு நோயாளிகள் குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது நல்லது
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கும்பம்
இன்று உத்யோகஸ்தர்களுக்கும் மற்றும் வியாபாரிகளுக்கும் தங்கள் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகள் நற்பெயர் பெற்றுத் தருவார்கள். காதலர்கள் முதலில் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. கடன் பிரச்சினை தீரும். நாணயத்தை காப்பாற்றுவீர்கள். தேக ஆரோக்கியம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மீனம்
மனதில் உற்சாகம் ஏற்படும். இன்று உங்கள் முயற்சி வெற்றியடையும். பணம் வரவு மேம்படும். குடும்பத் தலைவிகளுக்கு சேமிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தம்பதிகள் அன்யோன்யம் மேம்படும். உடல் நலத்தில் பல் வலி வந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு