இன்றைய ராசிபலன் (06.01.2026): உங்களின் நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும் நாள்..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;
இன்றைய பஞ்சாங்கம்
கிழமை: செவ்வாய் கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: மார்கழி
நாள்: 22
ஆங்கில தேதி: 6
மாதம்: ஜனவரி
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று மாலை 04-37 வரை ஆயில்யம் பின்பு மகம்
திதி: நட்சத்திரம் இன்று பிற்பகல் 12-16 வரை திரிதியை பின்பு சதுர்த்தி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 10-30 to 11-00
நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30
ராகு காலம்: பிற்பகல் 3-00 to 4-30
எமகண்டம்: காலை 9-00 to 10-30
குளிகை: காலை 12-00 to 1-30
கௌரி நல்ல நேரம்: காலை 01-30 to 2-30
கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்
இன்றைய ராசிபலன்
மேஷம்
அரசு தொடர்பானவைகளில் லாபம் உண்டு. புதிய பதவி தேடி வரும். உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். கலைஞர்களுக்கு பாராட்டுக்ள் குவியும். வீடு மனையால் லாபம் வரும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். பத்திரிகையாளர்கள் ஏற்றம் அடைவர்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
ரிஷபம்
முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வாக்குத் தொழிலால் லாபம் வந்தடையும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
அதிர்ஷட நிறம்: சிவப்பு
மிதுனம்
அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். வெளிநாட்டுச் செய்தி மகிழ்ச்சி தரும். ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கிவிடுவர். குடும்பப் பிரச்சினை சீராகும். வரவேண்டிய பதவி தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கடகம்
பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வெளியூர் பயணம் நேரிடும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். வாகனம் ஓட்டும் போது செல்போன் பேச வேண்டாம். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரிகளுக்கு விற்பனை கூடும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
சிம்மம்
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தான் விரும்பிய பெண்ணை நிச்சயம் செய்வீர்கள். பிரபலங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. உடல் நலத்தில் முன்னேற்றம் கூடும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கன்னி
கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். நிர்வாகத் திறமையால் பதவி உயரும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். பணப் புழக்கம் சரளமாக இருந்து வரும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் மதிப்பெண்களைப் பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்
உத்யோகத்தில் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். காதல் கண் சிமிட்டும். மனைவிவழியில் உதவிகள் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்
பங்குச் சந்தை லாபம் தரும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் முடியும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
அதிர்ஷட நிறம்: நீலம்
தனுசு
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மகரம்
கணவருடன் கருத்து வேறுபாடு. விட்டுக் கொடுப்பது நல்லது. வெளிநாட்டுத் தொடர்பு லாபத்தை அள்ளும். தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புண்டு. பணவரவு சற்று தாமதப்பட்டாலும் சம்பளம் வந்து சேரும். நட்பால் ஆதாயம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கும்பம்
தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும்.வேலையாட்களால் உதவிகள் உண்டு. தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். உங்கள் வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். தேகம் பளிச்சிடும். பல் வலி, மூட்டு வலி வந்துபோகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மீனம்
மூதாதையர் சொத்து கைக்கு வந்து சேரும். உங்களின் நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்