எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும் நாள்... இன்றைய ராசிபலன் - 10.11.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2025-11-10 06:34 IST

இன்றைய பஞ்சாங்கம்:-

விசுவாவசு வருடம் ஐப்பசி 24-ம் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 2.41 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்

திதி: இன்று காலை 08.31 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 6.15 - 7.15

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் மாலை: 7.30 - 9.00

எமகண்டம் காலை: 10.30 - 12.00

குளிகை காலை: 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை: 09.15 - 10.15

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

ராசிபலன்:-

மேஷம்

வங்கிக்கடன் உதவி கிடைக்கும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். படிப்பில் நன்கு ஆர்வம் பிறக்கும். வரண் தேடுபவர்களுக்கு நல்ல வரண் அமையும். அரைகுரையாக முடிக்க முடியாத வீடு கட்டும் பணி மீண்டும் துவங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். பிள்ளைகள் சொல்படி நடப்பர். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எங்கு சென்றாலும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மிதுனம்

திடீர் பயணங்கள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தம்பதிகளின் அன்பு பலப்படும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

கடகம்

வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். லாபத்தை அதிகரிப்பர். தம்பதிகளிடையே விட்டுக் கொடுப்பர். புதிய வாகனம் வாங்க திட்டுமிடுவீர்கள். பழைய வீட்டை சீர் செய்வீர்கள். உங்கள் வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

குடும்பத் தலைவிகள் தங்கள் விருப்பம் போல் தங்கள் கணவர் தங்களுக்கு வீட்டிற்கு தேவையானதை வாங்கி குவிப்பார். சொத்து வாங்குவது, விற்பது போன்ற நிலம் வீடு சம்பந்தப்பட்டவைகளில் லாபமாக முடியும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

கலைஞர்களுக்கு உற்சாகம் கூடும் நாள். பெரிய பேனர்களிலிருந்து அழைப்பு வரும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. உயர் பதவியும் கிடைக்கும். பிள்ளைச் செல்வம் இல்லாத குறை உங்களை பெரிதும் பாதித்ததே, இனி கவலை வேண்டாம் அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

துலாம்

குடும்பத் தலைவிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். முன்பிருந்ததை விட ஆரோக்கியம் மேம்படும். வாகனம் பழுதடையும், அதை சரி செய்வீர்கள். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். வியாபாரிகளுக்கு நல்ல விற்பனை உண்டு. எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

தனுசு

ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வயிறு உபாதை இருக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். காதலர்கள் தங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். மாணவர்களுக்கு அதிகம் மதிப்பெண் பெற வேண்டும் என்றால் இன்னும் முயற்சி தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். தம்பதிகளிடையே அன்பு பெருகும். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. உடல் நலத்தில் முன்னேற்றம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

தம்பதிகளிடையே வாக்குவாதம் வந்துபோகும். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். வியாபாரிகள் அரசு வகையில் ஆதாயபலன் பெறுவர். உடல்நிலை எப்போதும் சீராக இருக்கும். தொழிலதிபர்கள் தொழிலில் புதிய நவீன நுட்பத்தை கையாள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். அரசியல்வாதிகள் நாவடக்கமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பேச்சினால் விளைவுகளை சந்திப்பீர்கள். பொறுமை அவசியம். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

 

Tags:    

மேலும் செய்திகள்