பணவரவு நன்றாக இருக்கும்... இன்றைய ராசிபலன் - 08.12.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2025-12-08 06:36 IST

இன்றைய பஞ்சாங்கம்:

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 22-ம் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 9.39 வரை புனர்பூசம் பின்பு பூசம்

திதி: இன்று இரவு 9.51 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 6.15 - 7.15, மாலை 1.45 - 2.45

ராகு காலம்: மாலை 7.30 - 9.00

எமகண்டம்: காலை 10.30 - 12.00

குளிகை: காலை 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம்: காலை 9.15 - 10.15, மாலை 7.30 - 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: மூலம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

பணவரவு நன்றாக இருக்கும். உத்யோகஸ்தர்கள் வேலைப்பளுயை சமாளிப்பர். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். தம்பதியினர் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவர். மாமியார் வீட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் சொல்படி கணவர் நடப்பார். அவர் குடும்ப பொறுப்புகளை உணர்வார். தங்கள் பிள்ளைகள் தங்களுடைய விளையாட்டுத்தனத்தை போக்கிக் கொள்வர். பழைய அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். சம்பளம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்

குடும்பத்துடன் குல தெய்வபிரார்த்தனையை நிறைவேற்றுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரியிடம் வாகன வசதி கிடைக்கும். நண்பரை சந்திப்பீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பண வரவுக்கு குறைவில்லை. உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றமும் நடக்கும். வாய் நிதானம் தேவை. சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். மாணவ மணிகளுக்கு படிப்பு சம்பந்தமாக தங்களுடைய சக மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்வது நல்லது. உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

சிம்மம்

சுய தொழில் செய்யும் பெண்களுக்கு தங்கள் தொழிலுக்கான வங்கி கடன் கிடைக்கும். குடும்ப தலைவிகளுக்கு திடீரென சில நல்ல செய்திகள் வந்து சேரும். அலுவலக வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். வங்கிப் பணியாளர்கள் நிம்மதியடைவர். இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

மேலதிகாரிகள் பாராட்டை பெறுவர். சொந்த தொழில் செய்பவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் தொழிலை கற்றுத் தருவர். இணைய தளம் மற்றும் பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். தம்பதிகளிடையே அன்பு பலமாகும். பெண்களுக்கு கை, கால் வலி குறைந்து, உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

குடும்பத் தலைவிகள் கணவருக்கு தெரியாமல் அக்கம் பக்கத்தினருக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. தேக ஆரோக்கியம் பளிச்சிடும். நண்பர்களின் பக்கபலம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

குடும்பத் தலைவிகளுக்கு வெளிநாட்டுக்கு சென்ற கணவர் விடுமுறைக்கு வீடு திரும்புவார். தங்களுக்கு வேண்டிய தங்க நகை ஆபரணங்கள் மற்றும் பொருள்களை வாங்கிக் கொண்டு வருவார். பிரபலமானவர்களால் உதவி உண்டு. தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

பணம் பலவழிகளில் வரும். உடல் உற்சாகத்துடன் காணப்படும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல தொகை கிடைக்கும். ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கும்பம்

சொந்த தொழில் செய்பவர்கள் பல கிளைகள் ஆரம்பித்து அதில் நல்ல வருவாயும் பெறுவர். தம்பதிகள் வெளியே ஒருவருக்கொருவர் விட்டு தர மாட்டார்கள். பயணங்களின்போது கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் உங்களது தொழிலுக்கு உதவிபுரிவர். தேக ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்

குடும்ப தலைவிகள் தங்களின் பிள்ளைகளுக்கான சேமிப்பு தொகை முடிவடைந்து அதனை புதுப்பித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரி வழிகளில் உதவிகள் கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.

அதிரஷ்ட நிறம்: கருநீலம்

 

Tags:    

மேலும் செய்திகள்