மஹிந்திரா சுப்ரோ அறிமுகம்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா சரக்குப் போக்குவரத்துக்கு இலகுரக வாகனம் சுப்ரோ அறிமுகம்;

Update:2023-06-21 13:19 IST

ஆட்டோமொபைல் துறையில் இந்திய நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா தற்போது சரக்குப் போக்குவரத்துக்கு இலகுரக வாகனமாக சுப்ரோவை அறிமுகம் செய்துள்ளது. இது சி.என்.ஜி.யில் இயங்கும் வகையிலானது. சிறிய ரக சரக்கு வாகனங்களில் இரண்டு விதமான எரிபொருளில் (பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி.) இயங்கும் வாகனமாக வந்துள்ள முதலாவது வாகனம் இதுவாகும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.6.32 லட்சம்.

வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்போது அது சி.என்.ஜி. வாயுவில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாது காப்பு அம்சமாக சி.என்.ஜி. வாயு கசிவை உணரும் சென்சார் கண்காணிப்பு வசதி யும், எந்த எரிபொருளில் இயங்குவது என்பதைத் தீர்மானித்து அதற்கேற்ப எளிதில் மாற்றும் வசதியும் உள்ளது. இதன் இழுவைத் திறன் 750 கி.கி. ஆகும். சி.என்.ஜி. கொள்ளளவு 75 லிட்டராகும். இதன்மூலம் 325 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.

இது 27 பி.ஹெச்.பி. திறன் கொண்டது. 60 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. வெள்ளை, நீலம் உள்ளிட்ட நிறங்களில் இது கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்