கேல் ரத்னா விருது 2024: பரிந்துரை பட்டியலில் மனு... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
கேல் ரத்னா விருது 2024: பரிந்துரை பட்டியலில் மனு பாக்கர் பெயர் இல்லை
இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கல பதக்கங்கள் வென்று சரித்திர சாதனை படைத்த மனு பாக்கரின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் விளையாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Update: 2024-12-23 11:57 GMT