12-வது முறையாக கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
12-வது முறையாக கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவின் முத்தாய்ப்பான கொண்டாட்டம் டெல்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் விமரிசையாக நடந்து வருகிறது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த செங்கோட்டையில் இந்தியாவில் நீண்ட காலமாக பிரதமராக இருந்த நேரு 17 முறை கொடியேற்றி இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக அவருடைய மகள் இந்திரா காந்தி 16 முறை தேசியக் கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்.
இவர்களுக்கு அடுத்தபடியாக நீண்ட கால பிரதமர் என்ற பெயரை எடுத்திருக்கும் பிரதமர் மோடி கடந்த ஆண்டு 11-வது முறையாக கொடியேற்றி மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாதனையை முறியடித்து இருந்தார். இந்த ஆண்டு அவர் 12-வது முறையாக இன்று கொடியேற்றுகிறார்.
Update: 2025-08-15 00:56 GMT