இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025

சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.;

Update:2025-08-15 06:24 IST


Live Updates
2025-08-15 13:50 GMT

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து கவர்னருமான இல.கணேசன் (வயது 80) காலமானார். உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இல.கணேசன அண்மையில் தனது சென்னை வீட்டில் படியில் இருந்து விழுந்து இல.கணேசனுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. பாஜக தேசிய செயலாளர், தேசிய துணைத்தலைவர் தமிழ்நாடு தலைவர் தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்பு வகித்தவர். 

2025-08-15 13:10 GMT

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் உள்ள 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் சிலாப்-களை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

5 சதவீதம், 18சதவீதம் ஆகிய இரு சிலாப்-கள் மட்டும் இனி தொடரும். 12சதவீத வரி விதிக்கப்படும் பொருட்கள் 5 சதவீத-க்கும், 28 சதவீத வரி விதிக்கப்படும் பொருட்கள் 18 சதவீத-க்கும் மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் தொடர்பாக தீபாவளி பரிசு காத்திருக்கிறது என இன்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியிருந்தார்.

2025-08-15 13:03 GMT

இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா பகுதியில் தேசியக்கொடி இறக்கும் நிகழ்வை ஒட்டி இந்திய வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பெண் வீராங்கனைகளின் பைக் சாகசம் உள்ளிட்டவை பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தன; ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் ராணுவ சாகசம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

2025-08-15 12:19 GMT

கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்க பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை, அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

2025-08-15 12:17 GMT

மதுரை, பாரபத்தியில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள தவெக மாநில மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.5 ஒருங்கிணைப்பு குழுக்களுக்கும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து தவெக தலைமை அறிவித்துள்ளது.

2025-08-15 11:51 GMT

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாடு வீரர் பிரனீஷ் 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

2025-08-15 11:39 GMT

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3,000க்கு பாஸ் வழங்கும் திட்டம் இன்று (ஆக. 15) முதல் அமலுக்கு வந்துள்ளது. ரூ.3,000 கட்டணத்தில், 12 மாதங்கள் அல்லது 200 டோல் பயணங்கள் வரை இலவசமாகச் செல்லலாம். தனியார் கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-08-15 11:20 GMT

கேரள நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றார் ஸ்வேதா மேனன். 31 ஆண்டு சங்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் தலைவரானார். சமீபத்தில் நிதி ஆதாயத்திற்காக ஆபாசத் திரைப்படங்களில் நடித்ததாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இடைக் காலத் தடை வாங்கியுள்ளார்.

2025-08-15 11:11 GMT

ராஜஸ்தானில் மழலையர் பள்ளிகளில் பிரிக்கேஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்பு மாணவர்களுக்கு சமஸ்கிருத மொழிப் பாடத்தை கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு NCERT என்.சி.இ.ஆர்.டி. ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு முதலே இத்திட்டத்தை ராஜஸ்தான் அரசு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2025-08-15 11:09 GMT

சென்னை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நாகை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், கோவை, நெல்லை, தேனி, தென்காசி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்