பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் பிரதமர் மோடி 21... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம்
பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்படும். இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டு இருக்கும்.
கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்படுகிறது. இசையை இசைக்கும் ராணுவக் குழுவில் இந்த ஆண்டு அக்னிவீர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இணைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-08-15 01:00 GMT