பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை டெல்லி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றத்தை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இவரது உரையை தொடர்ந்து தேசிய மாணவர் படை மாணவர்களும், ‘‘எனது இந்தியா’’ அமைப்பின் 2500 தன்னார்வலர்களும் சேர்ந்து தேசிய கீதம் பாடுகிறார்கள். தொடர்ந்து இந்த தன்னார்வலர்கள் புதிய பாரதத்துக்கான இலச்சினையை உருவாக்கும் நிகழ்வும் இடம்பெறுகிறது.
சிறப்புமிக்க இந்த விழாவில் பங்கேற்க ஊராட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுயஉதவிக்குழு பெண்கள், மறுவாழ்வு பெற்ற கொத்தடிமை தொழிலாளர்கள், யோகா தன்னார்வலர்கள் என 5000 பேர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளனர். விழா நடைபெறும் செங்கோட்டையில் அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கும் எளிய அணுகல் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
Update: 2025-08-15 01:03 GMT