இன்று நமது சாதனைகளை கொண்டாடும் நாள்: சுதந்திர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
இன்று நமது சாதனைகளை கொண்டாடும் நாள்: சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி உரை
79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
இன்று நமது சாதனைகளை கொண்டாடும் நாள், 140 கோடி மக்களும் பெருமைப்படக் கூடிய திருவிழா. பல சவால்களை எதிர்கொண்டு, 1947ல் நமது நாடு சுதந்திரம் பெற்றது
இது பெருமை மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட கூட்டு சாதனைகளின் தருணம். தேசம் ஒற்றுமையின் உணர்வைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. 140 கோடி இந்தியர்கள் உற்சாகத்துடன் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறார்கள்.
அரசமைப்பு சட்டம்தான் இந்தியாவுக்கு ஒளி காட்டும் விளக்கு. கடந்த 78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் வழிகாட்டியாக இருக்கிறது
இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-08-15 02:25 GMT