“தீபாவளியில் மக்களுக்கு மிகப் பெரிய பரிசு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025

“தீபாவளியில் மக்களுக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது..” - பிரதமர் மோடி சுதந்திர தின அறிவிப்பு


79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “இந்த தீபாவளியை, நான் உங்களுக்கு இரட்டை தீபாவளியாக மாற்றப் போகிறேன். இந்த தீபாவளியில் நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசைப் பெறுவார்கள்... அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம்.

இது நாடு முழுவதும் வரி சுமையைக் குறைக்கும். தீபாவளிக்கு முன்னதாக இது ஒரு பரிசாக இருக்கும். அதற்கான குழு அமைக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி, மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும். இது சாமானிய மக்களுக்குப் பொருட்களின் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைக்கும். நமது சிறுதொழில் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள். அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மலிவாக மாறும், இது நமது பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்” என்று பிரதமர் மோடி கூறினார். 


Update: 2025-08-15 04:15 GMT

Linked news