சுதந்திர தின விழா உரையில் 9 அறிவிப்புகளை வெளியிட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
சுதந்திர தின விழா உரையில் 9 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடந்தன.
ஜார்ஜ் கோட்டை முகப்பில், புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக்கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கொடிக்குள் வைக்கப்பட்டு இருந்த பூக்கள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. மூவர்ணத்தில் பலூன்களும் பறக்கவிடப்பட்டன. தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர்.
Update: 2025-08-15 05:08 GMT