ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி - திருமாவளவன்
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; எங்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரியை முழுமையாக கை விட வேண்டும்.
தேர்தலுக்காக செய்தாலும் மக்களுக்கு பயன்தரும் என்பதால் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம். சுதந்திர தின விழாவில் ஆர்.எஸ்.எஸ்.-யை பிரதமர் பாராட்டி பேசியுள்ளது ஏற்புடையதல்ல” என்று அவர் கூறினார்.
Update: 2025-08-15 08:24 GMT