79-வது சுதந்திர தினம்: தேசியக்கொடி ஏற்றினார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025

79-வது சுதந்திர தினம்: தேசியக்கொடி ஏற்றினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சென்னை ஜார்ஜ் கோட்டை முகப்பில், புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக்கொடியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கொடிக்குள் வைக்கப்பட்டு இருந்த பூக்கள் காற்றில் பறந்து வந்து விழுந்தன.

இதனைத்தொடர்ந்து தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையாற்றி வருகிறார். 

முன்னதாக சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்து, முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். 

Update: 2025-08-15 03:37 GMT

Linked news