வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலம்;... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலம்; ரூ.1,600 கோடி நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
வெள்ள நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு ரூ.20,000 கோடி நிதி வழங்க வேண்டும் என பஞ்சாப் அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ.1,600 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Update: 2025-09-10 05:59 GMT