இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
நேபாளத்தில் 13,500 சிறை கைதிகள் தப்பினர்
நேபாளத்தில் நடந்த போராட்டங்களின் போது சுமார் 13,500க்கும் மேற்பட்ட கைதிகள்| சிறைகளில் இருந்து தப்பிச் சென்றதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.
“அதிமுக ஒன்றாக இருக்கிறது” -இபிஎஸ்
“அதிமுக ஒன்றாக இருக்கிறது என்பதை 2026 தேர்தலில் காண்பீர்கள்..”துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இஸ்லாம்நகர் பகுதியில் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் அசார் டேனிஷ் கைது செய்யப்பட்டார்.பயங்கரவாத எதிர்ப்புப்படை, டெல்லி போலீஸ் சிறப்புப்படை ராஞ்சி காவல்துறை கூட்டு அதிரடி நடவடிக்கை. அசார் டேனிஷ் மீது டெல்லியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் வரும் 14-ஆம் தேதிக்குள் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடிக்கம்பங்களை கட்சிகள் அகற்ற தவறினால் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றுவார்கள் என்றும் அகற்றுவதற்கான செலவுத்தொகை கட்சிகளிடம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகன் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி துரைமுருகன், அவரது மனைவி தாக்கல் செய்த மனுக்களுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நேபாள வன்முறையால் இடைநிறுத்தப்பட்ட விமானங்களின் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காத்மாண்ட்விற்கு செல்லும் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது. பயணிகள் அதிகாரப்பூர்வ விமான டிக்கெட்டுகள், அடையாள ஆவணங்களை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இது பிப்ரவரி 2026 இறுதிக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.