பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்க உள்ளது. வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு, மணிப்பூர் வன்முறை மற்றும் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தை இந்தியா கையாண்ட விதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள்  திட்டமிட்டுள்ளன. இதனால் அவை நடவடிக்கைகளில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

அதேபோல் மத்திய அரசை பொருத்தவரை மானியக் கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுதல், பட்ஜெட் நடைமுறைகளை நிறைவு செய்தல், மணிப்பூர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுதல் மற்றும் வக்ஃப் திருத்த மசோதாவை நிறைவேற்றுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான நாடாளுமன்ற ஒப்புதலை கோரும் சட்டப்பூர்வ தீர்மானத்தை உள்துறை மந்திரி அமித் ஷா முன்மொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூர் மாநிலத்திற்கான பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

Update: 2025-03-09 08:47 GMT

Linked news