இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-03-09 09:40 IST


Live Updates
2025-03-09 14:24 GMT

தெலுங்கானா சட்ட மேலவைக்கான வேட்பாளர்களாக விஜயசாந்தி உள்பட 3 பேரை அறிவித்தது காங்கிரஸ். பாஜகவில் இருந்து அண்மையில் விலகி காங்கிரசில் இணைந்த நடிகை விஜயசாந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுளது.

2025-03-09 14:04 GMT

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தில் 101 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

2025-03-09 14:02 GMT

புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நாளை (மார்ச்.10) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் 15ம் தேதி பணிநாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-03-09 12:00 GMT

"மகளிர் நலன் காக்க மாற்றம் வேண்டும்" என்ற கையெழுத்து இயக்கத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

2025-03-09 11:59 GMT

இந்து கோவில் மீது தாக்குதல்- காங்கிரஸ் கண்டனம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சினோ ஹில்ஸ் பகுதியில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி இழிவுபடுத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின்மை செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், எந்த நாகரிக சமூகத்திலும் அவர்களுக்கு இடமில்லை என்றும் காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா கூறி உள்ளார்.

2025-03-09 11:44 GMT

மதுரை கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தின் வெளியே தீ விபத்து ஏற்பட்டது.ஜல்லிக்கட்டு அரங்கின் வெளிப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்து. தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

2025-03-09 11:11 GMT

கொளுத்தும் வெயிலிலும் இறுதிப்போட்டியை சென்னை மெரினா கடற்கரையில் குடைப்பிடித்தபடி கண்டு ரசிக்கும் கிரிக்கெட் வெறியர்கள்

2025-03-09 11:01 GMT

பாதுகாப்பு படையினரின் ஒடுக்குமுறைகளை கண்டித்து குக்கி-ஜோ அமைப்புகள் சார்பில் மணிப்பூரில் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

2025-03-09 09:25 GMT

குடியாத்தம் அருகே கோவிலில் கற்பூரம் ஏற்றிக் காட்டும் போது மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்