‘பிரதமர் மோடியின் நண்பர்கள் இந்தியாவிற்கு பல... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
‘பிரதமர் மோடியின் நண்பர்கள் இந்தியாவிற்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள்’ - மல்லிகார்ஜுன கார்கே
பிரதமர் மோடியின் நண்பர்கள் இந்தியாவிற்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
“சர்வதேச அளவில் நமது நாட்டிற்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் தூதரக உறவுகளில் ஏற்பட்ட தோல்வியே காரணம். பிரதமர் 'எனது நண்பர்கள்' என்று பெருமையாகக் கூறும் அதே நண்பர்கள்தான் இன்று இந்தியாவிற்கு ஏராளமான சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Update: 2025-09-24 09:41 GMT