இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-09-24 10:22 IST


Live Updates
2025-09-24 13:49 GMT

சென்னை அருகே உள்ள பெருங்குடியில் இருந்து தரமணி செல்லும் பிரதான சாலையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. துரைப்பாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி என 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து வருகின்றனர்.

2025-09-24 13:19 GMT

வெளியான 20 நாட்களுக்குள் ஓடிடிக்கு வரும் ''காதி'' : அனுஷ்காவின் ஆக்சன் படத்தை எப்போது, ​​எதில் பார்க்கலாம்?

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ''காதி''. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கிய இந்தப் படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

2025-09-24 12:05 GMT

''நான் இப்போது இப்படி இருப்பதற்கு அல்லு அர்ஜுனும் ஒரு காரணம்'' - தமன்னா

கிட்டத்தட்ட இருபது வருடங்களாக படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. கதாநாயகி மற்றும் சிறப்புப் பாடல்களில் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்திய சினிமாவில் இன்றைய நடிகைகளில் மிகச்சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவராக தமன்னா கருதப்படுகிறார். அவரது நடன அசைவுகள் மற்றும் கவர்ச்சி ஆகியவை அவரை சிறப்புப் பாடல்களுக்கான சிறந்த தேர்வாக ஆக்கியுள்ளன

2025-09-24 11:47 GMT

அமெரிக்கா சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரானை தடுத்து நிறுத்திய ஜனாதிபதி ட்ரம்பின் கான்வாய் பாதுகாவலர்கள். உங்களின் வருகையால் என்னை தெருவில் நிறுத்தி விட்டதாக ட்ரம்பிடம் நகைச்சுவையாக செல்போனில் கூறினார் மேக்ரான்.

2025-09-24 11:23 GMT

ஓடிடி உலகில் அடியெடுத்து வைக்கும் பிரியங்கா மோகன் ?

பவன் கல்யாண், பிரியங்கா மோகனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ''ஓஜி'' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுஜீத் இயக்கி உள்ள இந்த கேங்ஸ்டர் ஆக்‌சன் படத்தில் பாலிவுட் நடிகர் எம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடித்திருக்கிறார். மேலும், ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

2025-09-24 11:04 GMT

உளுந்து, பச்சை பயிறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு கிலோ பச்சை பயிறுக்கு ரூ.87.68, ஒரு குவிண்டாலுக்கு ரூ.8,768 என குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உளுந்திற்கு ஒரு கிலோ ரூ.78, ஒரு குவிண்டாலுக்கு ரூ.7,800 குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

2025-09-24 10:57 GMT

1999 மக்களவைத் தேர்தல், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது. பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கலாம், அதிமுக கூட்டணி வைக்கக் கூடாதா? காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கூட்டணி ஆட்சி கேட்கிறார்கள்; செல்வப்பெருந்தகை மறுக்கிறார். திமுக கூட்டணிக்கு உள்ளேயே பிளவு ஏற்படத் தொடங்கியுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2025-09-24 10:54 GMT

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 10.91 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,865.68 கோடி போனஸாக வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்