தமிழகத்தில் நடப்பவை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களா? ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025
சேவை வழங்குவதை வெற்றிகரமாக செய்ய முடியாத தி.மு.க. அரசு, ஊழலை மட்டும் வெற்றிகரமாக செய்து வருகிறது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். பட்டா மாற்றம் கோரியும், மின்சார இணைப்பு கோரியும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாயக் கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பட்டா மாற்றம் செய்வதற்காக நிலங்களின் மதிப்புக்கு ஏற்ற வகையில் கையூட்டு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக உழவர் அமைப்புகளில் தலைவர்களே குற்றஞ்சாட்டியுள்ளனர். மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற தி.மு.க. அரசு முயன்று வருகிறது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
Update: 2025-09-06 09:42 GMT