துணை வேந்தர்கள் நியமன விவகாரம் - சுப்ரீம்கோர்ட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025

துணை வேந்தர்கள் நியமன விவகாரம் - சுப்ரீம்கோர்ட்டு புதிய உத்தரவு


துணைவேந்தர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, தமிழ்நாடு கவர்னர் அலுவலகம், யு.ஜி.சி. 4 வாரங்களில் பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் துணைவேந்தர் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடைவிதிப்பது குறித்து அடுத்த விசாரணையின்போது முடிவு செய்யலாம் என்றும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தங்களை நிறுத்தி வைத்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

Update: 2025-07-04 07:25 GMT

Linked news