இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை
மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் மயிலாடுதுறையில் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.
அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நயினார் நாகேந்திரன்
போலீசார் தாக்குதலில் உயிரிழந்த திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்தினரை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அஜித்குமார் மரணம்: கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கலா...?
கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நிகிதா. அவரது தாயார் ஒரு காரில் டிரைவருடன் வந்துள்ளனர். பின்னர் ஓட்டலில் அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.
அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்
அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 11.03 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
துணை வேந்தர்கள் நியமன விவகாரம் - சுப்ரீம்கோர்ட்டு புதிய உத்தரவு
துணைவேந்தர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, தமிழ்நாடு கவர்னர் அலுவலகம், யு.ஜி.சி. 4 வாரங்களில் பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் துணைவேந்தர் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடைவிதிப்பது குறித்து அடுத்த விசாரணையின்போது முடிவு செய்யலாம் என்றும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தங்களை நிறுத்தி வைத்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது.