செங்கடலில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-07-2025
செங்கடலில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதில், லைபீரிய நாட்டு கொடியுடன் வந்த எடர்னிட்டி சி என்ற சரக்கு கப்பலை கடுமையாக தாக்கினர். இதில் கப்பல் பணியாளர்கள் 3 பேர் பலியானார்கள்.
கப்பலில் இருந்த 25 பேரில் 6 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என ஐரோப்பிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், கிளர்ச்சியாளர்களின் கடுமையான தாக்குதலில் அந்த கப்பல் மூழ்க தொடங்கியது. அதனை மீட்பதற்கான முயற்சி பலனளிக்காமல் கப்பல் மூழ்கி விட்டது என தகவல் தெரிவிக்கின்றது. இதனால், பணியாளர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இது செங்கடல் பகுதியில் கப்பல்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
Update: 2025-07-10 04:11 GMT