முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண திட்டங்கள்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண திட்டங்கள் ரத்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கிருஷ்ணகிரி வந்துள்ளார். அங்கு ஒசூரில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதனை தொடர்ந்து இன்றும், நாளையும் கிருஷ்ணகிரியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிலையில், சபரீசனின் தந்தை மறைவு காரணமாக மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார். இதனால் அவரது பயண திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-09-11 07:28 GMT