ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பிணியை வெளியே தள்ளிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-07-2025
ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பிணியை வெளியே தள்ளிய வழக்கு: கோர்ட்டு அதிரடி உத்தரவு
ஹேமராஜ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை திருப்பத்தூர் மாவட்ட கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமராஜ் குற்றவாளி என்று நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 14-ந்தேதி அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி இன்று இந்த வழக்கு நீதிபதி மீனாகுமாரி தலைமையில் விசாரணைக்கு வந்தது. கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன், சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து மாவட்ட நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் தமிழக அரசும், ரெயிவே துறையும் சேர்ந்து ரூ. 1 கோடி நிவாரணத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.