இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-07-14 09:11 IST


Live Updates
2025-07-14 14:34 GMT

தமிழகம் முழுவதும் 33 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

2025-07-14 14:33 GMT

பிரெவிஸ் அதிரடி.. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி

ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இதில் இன்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் தென் ஆப்பிரிக்க அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. 

2025-07-14 14:30 GMT

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

அவருடைய பணியிட மாற்றத்திற்கான பரிந்துரையை கடந்த மே 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் வழங்கியிருந்தது. நடப்பு ஆண்டின் செப்டம்பர் 28-ல் அவர் ஓய்வு பெற இருக்கிறார்.

2025-07-14 14:28 GMT

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 11 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, தென்காசி மற்றும் கோவை ஆகிய 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-07-14 13:45 GMT

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகர திட்டம்! அரசு அலுவலகங்களை நீங்கள் நாடி செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களை கொண்டு வந்து கொடுத்து - அதனை பெற்று தீர்வு காண்பதுதான் உங்களுடன் ஸ்டாலின்!

10 ஆயிரம் முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா இ.ஆ.ப., மேலும் விவரித்திருக்கிறார்! என அதில் தெரிவித்து உள்ளார்.

2025-07-14 13:24 GMT

ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பிணியை வெளியே தள்ளிய வழக்கு: கோர்ட்டு அதிரடி உத்தரவு

ஹேமராஜ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை திருப்பத்தூர் மாவட்ட கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமராஜ் குற்றவாளி என்று நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 14-ந்தேதி அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி இன்று இந்த வழக்கு நீதிபதி மீனாகுமாரி தலைமையில் விசாரணைக்கு வந்தது. கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன், சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து மாவட்ட நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் தமிழக அரசும், ரெயிவே துறையும் சேர்ந்து ரூ. 1 கோடி நிவாரணத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்