டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு


அதிகாலையிலேயே சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி அங்கு தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்தபின் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷாவை சந்திக்கும் முன் இன்று சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி, அங்கு தேநீர் விருந்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி சென்றடைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் தனபால், இன்பதுரை உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர்

Update: 2025-09-16 05:03 GMT

Linked news