தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக திரும்ப ஏற்பாடு:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025
தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக திரும்ப ஏற்பாடு: தமிழக அரசு தகவல்
பஞ்சாப் மாநிலத்தில் கபடி விளையாடியபோது ஏற்பட்ட மோதலில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழகத்தில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. அத்துடன், தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், பஞ்சாப் மாநிலத்தில் தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் தமிழகத்திற்கு பத்திரமாக திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளது.
Update: 2025-01-24 10:57 GMT