இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
பஞ்சாப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக திரும்ப ஏற்பாடு: தமிழக அரசு தகவல்
பஞ்சாப் மாநிலத்தில் கபடி விளையாடியபோது ஏற்பட்ட மோதலில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழகத்தில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. அத்துடன், தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், பஞ்சாப் மாநிலத்தில் தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் தமிழகத்திற்கு பத்திரமாக திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளது.
ஆளுனரின் குடியரசு தின விருந்தில் பங்கேற்கும்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே ஆயுத தொழிற்சாலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக செயற்பாட்டாளர் ஜெபகர் அலி கொலையை கண்டித்து புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகம் முழுவதும் கனிம வள கொள்ளை நடக்கிறது. கேப்டனின் தம்பியாக கனிமவளக்கொள்ளையை தட்டிக்கேட்டவர் ஜெபகர் அலி கொலை செய்யப்பட்டுள்ளார். ஜெபகர் அலி மரணத்தில் காவல் துறை தனது கடமையை செய்யவில்லை. காவல் துறை தங்களது கடமையை செய்திருந்தால் நாங்கள் போராட வேண்டியிருக்காது என்றார்.