காசாவில் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024

காசாவில் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 14 மாதங்களாக நீடிக்கும் போரில் காசா முனையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பொதுமக்கள் எத்தனை பேர், ஹமாஸ் அமைப்பினர் எத்தனை பேர்? என்று விளக்கமாக கூறவில்லை. ஆனால் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று மட்டும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதேசமயம், 17,000க்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. 

Update: 2024-12-16 12:41 GMT

Linked news