பிரதமர் மோடி இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025
பிரதமர் மோடி இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக இன்று காலை அவர் விமானத்தில் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டார். அவர் அந்நாட்டில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதன்பின்பு இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார். இந்நிலையில், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரை பிரதமர் மோடி சென்றடைந்து உள்ளார்.
அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினர் தயாராக உள்ளனர். வந்தே மாதரம் மற்றும் ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டமடி பாங்காக் நகரில் காத்திருக்கின்றனர்.
Update: 2025-04-03 06:07 GMT