இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-04-03 09:11 IST


Live Updates
2025-04-03 13:45 GMT

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2025-04-03 13:26 GMT

நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

2025-04-03 12:34 GMT

வக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக மாவட்டந்தோறும் நாளை (ஏப்.4) தவெகவினர் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் அறிவுறுத்தி உள்ளார். 

2025-04-03 12:28 GMT

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ், ஒபிஎஸ் ஆகியோருக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அடுத்த கட்ட ஆலோசனைகளை முன்னெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-04-03 12:26 GMT

கச்சத்தீவை மீட்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

2025-04-03 12:23 GMT

தமிழகத்தில் விளையக்கூடிய தர்பூசணி பழங்களை தாராளமாக உண்ணலாம்.சென்னையில் விற்பனையாகும் தர்பூசணியில் எந்த பயமும் இல்லை, 99 சதவீதம் சரியான முறையில் தான் விற்பனை என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஸ் விளக்கம் அளித்துள்ளார்.

2025-04-03 11:58 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகோசமங்கை ஸ்ரீமங்களநாதசுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை ஈடு செய்யும் பொருட்டு, ஏப்.10-ம் தேதி வேலைநாளாக இருக்கும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் கூறியுள்ளார்.

2025-04-03 11:52 GMT

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற ஏப்.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெற விவசாயி அடையாள எண் அவசியம் என தெரிவித்துள்ளது.

2025-04-03 11:03 GMT

தடை செய்யப்பட்ட சென்டினல் தீவுக்குள் சென்ற அமெரிக்காவை சேர்ந்த இளைஞரை அந்தமான் போலீசார் கைது செய்துள்ளனர். கையில் தேங்காய், கோகோ கோலா பானத்துடன் படகில் சென்று அங்கு இறங்கியவர், பழங்குடிகள் யாரும் வராததால் பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு கொஞ்சம் மண் எடுத்துவிட்டு திரும்பி உள்ளார். 

2025-04-03 10:25 GMT

ராமாயணம் உணமையிலேயே ஆசியாவின் பல பகுதிகளில் உள்ள இதயங்களையும் பாரம்பரியங்களையும் இணைக்கிறது. இதனைபோன்றதொரு கலாசாரப்பிணைப்பு வேறெதுவும் இல்லை என்று பிரதமர் மோடி தாய்லாந்தில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்