சத்தீஸ்கரில் சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்து; 10 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பயணிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரவில்லை. சரக்கு ரெயில் நிற்கும் அதே தண்டவாளத்தில் எப்படி பயணிகள் ரெயில் வர அனுமதிக்கப்பட்டது?. இது மனிதத் தவறால் நடந்ததா? அல்லது சிக்னல் கோளாறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக ரெயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Update: 2025-11-04 12:08 GMT