தவெக மாவட்ட செயலாளர்களை காவலில் எடுத்து விசாரிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-10-2025
தவெக மாவட்ட செயலாளர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டம்
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையை நேற்று தொடங்கியது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அதிகாரிகள் தடயங்களை சேகரித்தனர்.
இந்த நிலையில், விஜய் பிரசார கூட்ட நெரிசல் வழக்கில் கைதான தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் புவுன்ராஜை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளது. மேலும் வேலுசாமிபுரத்தில் 2-வது நாளாக ஆய்வு செய்ய அஸ்ரா கர்க் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது. வேலுசாமிபுரத்தில் அளவீடுகளை மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.
Update: 2025-10-06 05:16 GMT