பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-10-2025
பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு 23 வாகனங்கள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.62 கோடி செலவில் 23 வாகனங்கள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியிலிருந்து 3 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்களின் பயன்பாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், பழங்குடியின மக்களின் மருத்துவப் பயன்பாட்டிற்காக ரூ.5.78 கோடி செலவில் 25 அவசர கால ஊர்திகள், ரூ.4 கோடி செலவில் 20 நடமாடும் மருத்துவ ஊர்திகள் ஆகியவற்றின் பயன்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.
Update: 2025-10-06 05:45 GMT