ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் உள்ள சவாய் மான்சிங்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என இ-மெயிலில் மிரட்டல் விடப்பட்டது. இதனை தொடர்ந்து மக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மெயில் பின்னர் ஆய்வுக்காக காவல் துறை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு குழுவும் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என ராஜஸ்தான் விளையாட்டு கவுன்சிலின் தலைவர் நீரஜ் கே. பவன் கூறியுள்ளார்.

Update: 2025-05-08 10:02 GMT

Linked news