காஞ்சிபுரத்தில் புதிய ஆலை அமைக்கும் டிக்ஸன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025

காஞ்சிபுரத்தில் புதிய ஆலை அமைக்கும் டிக்ஸன் நிறுவனம்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுக்கும், டிக்ஸன் நிறுவனத்துக்கும் இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ரூ.1,000 கோடி முதலீடு செய்வதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் அமைக்கப்பட உள்ள டிக்ஸன் டெக்னாலஜிஸ் ஆலை மூலமாக மடிக்கணினி, ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி சேவைகள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-04-09 07:22 GMT

Linked news