டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, கரவால் நகர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, கரவால் நகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக கபில் மிஷ்ரா நிறுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில், இதுபற்றி இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ள பா.ஜ.க.வின் மோகன் சிங் பிஷ்த் கூறும்போது, நாங்கள் யாரை வேண்டுமென்றாலும் நிறுத்துவோம்.
அவர் வெற்றி பெறுவார் என பா.ஜ.க. நினைக்கிறது. இது ஒரு பெரிய தவறு. புராரி, கரவால் நகர், கோண்டா, சீலாம்பூர், கோகல்புரி மற்றும் நந்த் நக்ரி தொகுதிகளில் என்ன நடக்கும் என காலம் பதில் சொல்லும்.
நான் வேறு எந்த தொகுதியிலும் போட்டியிடமாட்டேன். ஜனவரி 17-ந்தேதிக்கு முன் கரவால் நகர் தொகுதியில் என்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்வேன் என்றார்.
Update: 2025-01-12 08:23 GMT