11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. 

இந்தநிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, பிளஸ்-1 பொதுத்தேர்வு இனி கிடையாது என மாநில பள்ளிக்கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி வந்த நிலையில் தேர்வு ரத்து என்ற அறிவிப்பால் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2025-10-13 07:57 GMT

Linked news