கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து வருகிறார்.
அவர் கூறியதாவது:-
கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது. பிரசாரத்திற்கு தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்தது. கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறி விட்டனர். கரூரில் அதிகாரிகள் மற்றும் போலீசார் என 606 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வழக்கமாக அரசியல் பரப்புரைக் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காவலர்கள் எண்ணிக்கையைவிட கரூர் பரப்புரையின்போது அதிகமாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.