இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சென்னை,
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கி கடன் தொகை ரூ.21 கோடியை லைகா நிறுவனம் கொடுத்து கடனை அடைத்தது. இந்த கடன் தொகையை திருப்பி தரும் வரையில், விஷால் தயாரிக்கும் திரைப்படங்களின் உரிமைகளுக்கும் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று லைகா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஆனால், விஷால் தயாரித்த படங்களை நேரடியாக வெளியிட்டது. இதையடுத்து பணத்தை திருப்பிக் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ,21 கோடியே 29 லட்சத்தில், 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க விஷாலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், ‘‘தற்போது நடிகர் விஷால், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மகுடம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்திற்காக பெறப்படும் ஊதிய தொகையை டெபாசிட் செய்ய அவருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு நடிகர் விஷால் பதிலளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி வழக்கை வருகிற நவம்பர் 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
கரூர் விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: -
கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்” இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரண விவகாரம்; கணவர் கவின்குமார் தொடர்ந்த வழக்கில் ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக்.15) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல்: கைதான தவெக நிர்வாகிகள் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கைதான தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
நீதிமன்ற வளாகத்தில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்துள்ளதால் கரூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே கூடுதலாக சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
அந்த வலியால் நான்...அரிய பிரச்சினையால் அவதிப்படும் நட்சத்திர நடிகை
தற்போது அவர் சமூக ஊடகங்கள் மூலம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.