“டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசியதாவது:-
கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை.
2019 முதல் 2023ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. எனினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
இவ்வாறு அவர் கூறினர்.
Update: 2025-10-17 07:01 GMT